Prayer Room
Join in prayer and hold an intention in the light.
இறை ஊழியர்
அருள்தந்தை D.S.அமலோற்பவதாஸ்
அவர்களின் அருளாளர் பட்டத்திற்கான
இறைவேண்டல்
அன்பும் இரக்கமும் நிறைந்த எங்கள் தந்தையே இறைவா, உமது உண்மையுள்ள ஊழியரான அருள்தந்தை D.S.அமலோற்பவதாஸ் அவர்களை எங்களுக்கு ஓர் அரும்பெரும் கொடையாக வழங்கியதற்காக உம்மைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த அன்பும், உமது இறைவார்த்தையை அறிவிப்பதில் தணியாத ஆர்வமும், திருஅவையின் மீது ஆழமான பற்றும், ஏழைகள் மற்றும் எளிய மக்கள்மீது உண்மையான அக்கறையும் அவருக்கு அருளினீர். நற்செய்தி ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும், ஒவ்வொரு பண்பாட்டிலும் வேரூன்றி வளர வேண்டும் என்ற வேட்கையுடன் அவர் பணியாற்ற அருள்புரிந்தீர்.
குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோரை ஆன்மிக வாழ்விலும் இறைப்பணியிலும் உருவாக்கியதற்காகவும், நற்செய்தி அறிவிப்பில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற்காகவும், செபம், தியானம் ஆகியவற்றின் வழியாக உம்மோடு ஆழ்ந்த ஒன்றிப்பில் வாழ்ந்ததற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம்.
அவரது இறைநம்பிக்கை நிறைந்த வாழ்வும், ஆன்மிகச் சிந்தனைகளும் எங்களையும் புனித வாழ்வை நாடவும், திருஅவையை ஆழமாக அன்புசெய்து பணியாற்றவும், இயேசு கிறிஸ்துவை நம்பிக்கையுடனும் உண்மையுடனும் அறிவிக்கவும் தூண்டுவனவாக.
அன்புத் தந்தையே, உமது திருவுளத்தின்படி, உமது ஊழியர் அருள்தந்தை D.S.அமலோற்பவதாஸ் அவர்களின் புனித வாழ்வைத் திருஅவை அங்கீகரித்து, அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கிட அருள்புரியும்.
மேலும், அவரது பரிந்துரையின் வழியாக, நாங்கள் இப்போது உம்மிடம் தாழ்மையுடன் வேண்டுகின்ற இந்தச் சிறப்பு மன்றாட்டிற்கு கனிவுடன் செவிசாய்த்தருளும்.
(இங்கு உங்களது தனிப்பட்ட வேண்டுதலை மௌனமுடன் சமர்ப்பிக்கவும்.)
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
Bring your intention
to the flame
Intentions are received privately and appear on the candle wall only after moderation. Please do not include sensitive personal information.
Pray with us ↓Request a private prayer →Virtual candle wall
Light a candle and join this shared vigil. Intentions are shown after review.
0 candles shining in remembrance
Be the first to offer a candle.